
தமிழ்நாட்டிலுள்ள திரையரங்குகளில் புதிய தமிழ்த் திரைப்படங்களுக்கு முதல் வாரத்தில் தினசரி 6 காட்சிகள் காலை 6 மணியிலிருந்து அடுத்த நாள் காலை 2.30 மணி வரை திரையிட முதலமைச்சர் விஜய் உத்தரவிட்டுள்ளார்.
திரைப்படத் துறையினர் விடுத்த கோரிக்கையை ஏற்று, தமிழ்நாடு திரையரங்குகள் ஒழுங்குமுறை விதிகளில் திருத்தம் செய்து உள்ளூர் பண்டிகைகள் மற்றும் விடுமுறை நாட்களிலும் 6 காட்சிகள் வரை திரையிட அனுமதியளிக்கப்பட்டுள்ளது.
இந்த அறிவிப்பினால் திரையரங்கு உரிமையாளர்களுக்கு கூடுதல் வருமானம் கிடைப்பதுடன், தீபாவளியையொட்டி வெளியாகும் சூர்யாவின் 'சீன்' திரைப்படத்திற்கும் இது பயனளிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.