
மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, தொகுதி மறுவரையறை நடவடிக்கையால் தென் மாநிலங்களின் பிரதிநிதித்துவம் குறையாது என்று லோக்சபாவில் உறுதியளித்துள்ளார்.
புதிய வரைவின்படி லோக்சபா தொகுதிகள் 543-ல் இருந்து 816-ஆக உயரும், இதில் தென் மாநிலங்களின் தொகுதிகள் 129-ல் இருந்து 195-ஆக அதிகரிக்கும்.
மறுவரையறை ஆணையத்தின் பரிந்துரைகள் ஜனாதிபதியின் ஒப்புதலுக்குப் பிறகே அமலுக்கு வரும் என்பதால், 2029-ம் ஆண்டு வரை தற்போதைய நிலையே தொடரும்.