
நேபாளத்தின் நுவாகோட் பகுதியில் ஏற்பட்ட வெள்ளத்தில், திரிபுவன் திரிசூலி மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் ராஜேந்திர தவாடி 1,643 மாணவர்களைப் பாதுகாப்பாக மீட்டுள்ளார்.
புதன்கிழமை காலை 9:20 மணிக்கு எச்சரிக்கை கிடைத்ததும், பள்ளி மணியை அடித்து மாணவர்களை வெளியேற்றிய 10 நிமிடங்களில் பள்ளி விடுதிக் கட்டடம் வெள்ளத்தில் மூழ்கியது.
இந்த துயரச் சம்பவத்தில் பள்ளியின் சமூக அறிவியல் ஆசிரியர் சந்தோஸ் (32) மற்றும் துப்புரவுப் பணியாளர் சுல்தான் ஆகிய இருவர் பரிதாபமாக உயிரிழந்தனர்.