
முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோ பிளாட்பார்ம்ஸ் நிறுவனம் மூலமாக ரூ.30,213 கோடியைத் திரட்ட நாளை அக்டோபர் 21 முதல் ஐபிஓ வெளியாகிறது.
இந்த ஐபிஓ சந்தாதாரர் சேர்க்கை அக்டோபர் 23 வரை நடைபெறவுள்ள நிலையில், ஒரு பங்கின் விலை ரூ.1,065 முதல் ரூ.1,119 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
சில்லறை முதலீட்டாளர்கள் குறைந்தபட்சம் ஒரு லாட் (12 பங்குகள்) வாங்க ரூ.13,428 முதலீடு செய்ய வேண்டும் என்றும், அக்டோபர் 28-ல் பங்குச்சந்தையில் பட்டியலிடப்படும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.