
ஆசிய விளையாட்டுப் போட்டிக்கான ஏற்பாடுகளில் அதிருப்தி அடைந்துள்ள பிசிசிஐ, இந்திய அணியை அனுப்புவதற்குப் பதிலாக பி அணியை அனுப்ப ஆலோசித்து வருகிறது.
உடை மாற்றும் அறைகள் கூடாரங்களில் அமைக்கப்பட்டிருப்பது மற்றும் கழிவறைகள் 500 மீட்டர் தொலைவில் இருப்பது வீரர்களுக்கு சிரமத்தை ஏற்படுத்துவதாக பிசிசிஐ தெரிவித்துள்ளது.
கடந்த 2023-ம் ஆண்டு சீனாவில் நடைபெற்ற போட்டியில் இந்திய ஆண்கள் மற்றும் பெண்கள் அணிகள் தங்கப் பதக்கம் வென்றிருந்தது குறிப்பிடத்தக்கது.