
பீகாரின் சிவான் மாவட்டத்தில் நீட் தேர்வு முறைகேட்டிற்கு எதிராக நடந்த போராட்டத்தின்போது, மாணவர்களை நோக்கி ஏகே-47 துப்பாக்கியால் சுட்ட காவலர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
இந்த துப்பாக்கிச்சூட்டில் 15 வயது சிறுவன் உட்பட 3 பேர் காயமடைந்து, பாட்னாவில் உள்ள ஜெயப்பிரபா மெடாண்டா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
சம்பவம் குறித்து துறை ரீதியான விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ள நிலையில், எதிர்க்கட்சித் தலைவர்கள் ராகுல் காந்தி மற்றும் தேஜஸ்வி யாதவ் ஆகியோர் இதற்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.