
தமிழக சட்டப்பேரவை பட்ஜெட் கூட்டத்தொடர் இன்றுடன் நிறைவடையும் நிலையில், ஆளுங்கட்சி மற்றும் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் மாறி மாறி விவாதிப்பதால் அவையின் பொன்னான நேரம் வீணடிக்கப்படுவதாக எடப்பாடி பழனிசாமி குற்றம் சாட்டியுள்ளார்.
தினமும் 10 மணி நேரம் அவை நடைபெறுவதாகக் கூறினாலும், அதில் 3 மணி நேரம் மட்டுமே மக்கள் பிரச்னைகள் குறித்து விவாதிக்கப்படுவதாகவும் அவர் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
முதலமைச்சரின் துறைகள் தொடர்பான மானியக் கோரிக்கையின்போது தான் எழுப்பிய கேள்விகளுக்கு முதலமைச்சர் பதிலளிக்கவில்லை என்றும், இந்த அரசு செயலிழந்த அரசாங்கமாக இருப்பதாகவும் அவர் விமர்சித்துள்ளார்.