
மேட்டூரில் தண்ணீர் திறக்கப்படாததால் பாதிக்கப்பட்ட டெல்டா விவசாயிகளுக்கு, ஏக்கருக்கு ரூ.25,000 இழப்பீடு வழங்க வேண்டும் என இபிஎஸ் வலியுறுத்தியுள்ளார்.
சுமார் 1.85 லட்சம் ஏக்கர் நிலத்தில் குறுவை சாகுபடி பாதிக்கப்பட்டுள்ள நிலையில், திருவாரூர் மாவட்டத்தில் மட்டும் 1 லட்சம் ஏக்கர் பயிர்கள் கருகியுள்ளன.
பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு 24 மணிநேரமும் தடையின்றி விலையில்லா மும்முனை மின்சாரம் வழங்கப்பட வேண்டும் என்றும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.