
சவுதி அரேபியாவில் உள்ள மக்கா மற்றும் மதினாவை நோக்கி ஹவுதிகள் ஏவிய இரண்டு பாலிஸ்டிக் ஏவுகணைகளை தங்கள் வான்பாதுகாப்பு அமைப்பு இடைமறித்து அழித்ததாக சவுதி அரேபியா தெரிவித்தது.
மக்கா மற்றும் மதினா ஆகிய தளங்களில் ஏவுகணைகளின் சிதறல்கள் விழுந்ததாக சவுதி குடிமை பாதுகாப்பு பொது இயக்குநரகம் தெரிவித்தது.
சவுதி அரேபியாவில் உள்ள பகுதிகளை இலக்காக கொண்டு எந்தவொரு நடவடிக்கையையும் மேற்கொள்ளவில்லை என ஹவுதி ராணுவ செய்தி தொடர்பாளர் யஹ்யா சரீ மறுப்பு தெரிவித்துள்ளார்.