
தமிழ்நாட்டில் பரவி வரும் டெங்கு மற்றும் இதர வைரஸ் காய்ச்சல்களுக்கு சித்த மருத்துவமான நிலவேம்பு குடிநீரை தற்காப்பு மற்றும் சிகிச்சை மருந்தாகப் பயன்படுத்தலாம் என இந்திய மருத்துவம் மற்றும் ஓமியோபதி இயக்குநர் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாட்டில் உள்ள அரசு மருத்துவமனைகள் மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்களில் சுமார் 40,475 கிலோ நிலவேம்பு குடிநீர் சூரணம் தயார் நிலையில் பயன்பாட்டிற்காக உள்ளது.
பொதுமக்கள் 5 கிராம் சூரணத்தை 200 மி.லி தண்ணீரில் கலந்து 50 மி.லி ஆகக் காய்ச்சி மருத்துவர்களின் ஆலோசனையுடன் பருகலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.