
நிக்கோலஸ் கேஜ் நடித்த ‘ஃபோர்ட்டிட்யூட்’ திரைப்படத்தின் மாஸ்டர் நகல் திருடப்பட்ட விவகாரத்தில், நெட்பிளிக்ஸ் நிறுவனத்திடம் 870 கோடி ரூபாய் இழப்பீடு கேட்டுத் தயாரிப்பாளர் வழக்கு தொடர்ந்துள்ளார்.
45 மில்லியன் டாலர் செலவில் தயாரிக்கப்பட்ட படத்தின் ஒரிஜினல் நகல் நெட்பிளிக்ஸிடம் ஒப்படைக்கப்பட்ட 9 நாட்களில் திருடப்பட்டதாகத் தயாரிப்பாளர் தரப்பு குற்றம் சாட்டியுள்ளது.
தொழிற்துறை பாதுகாப்பு நடைமுறைகள் இன்றி ஒப்படைக்கப்பட்ட படத்திற்குத் தாங்கள் பொறுப்பேற்க முடியாது என நெட்பிளிக்ஸ் நிறுவனம் மறுப்பு தெரிவித்துள்ளது.