
செங்கல்பட்டு மாவட்டம் கோவளத்தில் நடைபெற்ற தென்மண்டல கூட்டத்தில், தொகுதி மறுவரையறை விவகாரத்தில் தவெக அரசு தனது நிலைப்பாட்டில் உறுதியாக இருப்பதாக அமைச்சர் சி.டி.ஆர் நிர்மல்குமார் தெரிவித்துள்ளார்.
மக்களவைத் தொகுதிகளின் எண்ணிக்கையை 543-லிருந்து உயர்த்தக்கூடாது மற்றும் தமிழகத்தின் 39 எம்பிக்கள் எண்ணிக்கையில் மாற்றம் இருக்கக்கூடாது என்பதில் தவெக அரசு உறுதியாக உள்ளதாக அவர் விளக்கமளித்துள்ளார்.
மறுவரையறை நடவடிக்கையால் தென்மாநிலங்களுக்கு பாதிப்பு ஏற்படக்கூடாது என முதல்வர் விஜய் வலியுறுத்தியுள்ள நிலையில், காவிரி மற்றும் முல்லை பெரியாறு விவகாரங்கள் குறித்து இக்கூட்டத்தில் விவாதிக்கப்படவில்லை என அமைச்சர் கூறினார்.