
ஈரானின் பொருளாதாரத்தை முடக்கும் நோக்கில் 'பொருளாதார டி-டே' என்ற பெயரில் புதிய தடைகளை விதிக்க அமெரிக்கா திட்டமிட்டுள்ளதாக நிதி மந்திரி ஸ்காட் பெசென்ட் அறிவித்துள்ளார்.
அமெரிக்காவின் இந்த நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ள ஈரான், ஹோர்முஸ் ஜலசந்தி வழியாக எண்ணெய் ஏற்றுமதி நிறுத்தப்படும் என எச்சரிக்கை விடுத்துள்ளது.
இந்த மோதலால் கச்சா எண்ணெய் விநியோகம் பாதிக்கப்பட்டு, உலகளாவிய பொருளாதார நெருக்கடி ஏற்படும் அபாயம் உள்ளதாக பல்வேறு நாடுகள் கவலை தெரிவித்துள்ளன.