
கோவை மாவட்டம் தொண்டாமுத்தூரில் நடைபெற்ற அதிமுக செயல்வீரர்கள் கூட்டத்தில், முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி பொள்ளாச்சி ஜெயராமன் மீது பகிரங்கமாக விமர்சனங்களை முன்வைத்தார்.
தவெக அரசுக்கு ஆதரவாக வாக்களித்த விவகாரத்தில் தங்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோருபவர்கள், திமுகவுடன் கூட்டணி சேரப் பேசியவர்கள் மீது ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை என்று அவர் கேள்வி எழுப்பினார்.
கட்சியில் சில பதவிகள் வழங்கப்பட்டதில் உள்ள முரண்பாடுகள் காரணமாக, பொதுக்குழுவைக் கூட்ட வேண்டும் என்ற கோரிக்கையை எஸ்.பி.வேலுமணி மீண்டும் வலியுறுத்தியுள்ளார்.