
அரசு நிகழ்ச்சிகளில் தமிழ்த்தாய் வாழ்த்தை முதலில் பாட வேண்டும் என தமிழக அரசு ஆகஸ்ட் 12-ஆம் தேதி அரசாணை பிறப்பித்துள்ளதாக நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.
மத்திய அரசின் புதிய அரசாணையின்படி மாநில பாடலை எப்போது பாடுவது என்பது குறித்து முடிவு செய்யும் அதிகாரம் மாநில அரசுக்கு வழங்கப்பட்டுள்ளது.
மனுதாரரின் கோரிக்கை ஏற்கனவே நிறைவேற்றப்பட்டதால், தமிழ்த்தாய் வாழ்த்து தொடர்பான வழக்கை சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.