
அமெரிக்காவின் மைக்ரோசாஃப்ட் நிறுவன தயாரிப்பான விண்டோஸ் ஓஎஸ்-ஐப் பயன்படுத்துவதை நிறுத்திவிட்டு, அதற்குப் பதிலாக லினக்ஸ் அடிப்படையிலான உள்நாட்டு மென்பொருளைப் பயன்படுத்துமாறு அரசு நிறுவனங்களுக்கு சீனா உத்தரவிட்டுள்ளது.
தரவுப் பாதுகாப்பு மற்றும் அமெரிக்கா உளவு பார்க்கக்கூடும் என்ற சந்தேகத்தின் அடிப்படையில், விண்டோஸ் 10 கஸ்டமைஸ்ட் ஓஎஸ் பயன்பாட்டை நீக்க ப்ளூம்பெர்க் செய்தி நிறுவனத்தின்படி சீனா இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளது.
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் சீனப் பொருட்களுக்கு வரி விதித்ததற்குப் பதிலடியாக, அரியவகை கனிமங்கள் ஏற்றுமதியை சீனா நிறுத்தியதைத் தொடர்ந்து இந்த புதிய தொழில்நுட்பக் கட்டுப்பாடு வந்துள்ளது.