
பெங்களூருவில் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி பொதுமளிடம் பணம் பறிக்கும் மோசடிகள் அதிகரித்து வருகின்றன.
குரல் பதிவுகளை சேகரித்து ஏ.ஐ. மூலம் குடும்பத்தினர் போல பேசி விபத்து அல்லது மருத்துவ உதவிக்கு பணம் கேட்டு குற்றவாளிகள் மிரட்டுகின்றனர்.
தெரியாத எண்களில் இருந்து அழைப்பு வந்தால் உடனடியாக பணம் அனுப்பாமல் சொந்த எண்களுக்கு அழைத்து உண்மையை உறுதி செய்யும்படி காவல்துறை எச்சரித்துள்ளது.