
சென்னையில் நடைபெற்ற ஆந்திர மாநில முன்னாள் முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டியின் உறவினர் திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் அரசியல், தொழில் மற்றும் சினிமா துறைகளின் பிரபலங்கள் பங்கேற்றனர்.
இந்த விழாவில் முதல்வர் விஜய், ஜெகன்மோகன் ரெட்டி மற்றும் தொழிலதிபர் கவுதம் அதானி ஆகியோர் முன்வரிசையில் ஒன்றாக அமர்ந்து கலந்துரையாடினர்.
அதானியும் முதல்வர் விஜயும் சந்தித்துள்ளதால் தமிழகத்தில் தொழில் முதலீடு மற்றும் உள்கட்டமைப்பு தொடர்பான திட்டங்கள் இனி வேகம் எடுக்கும் என்று தவெக நிர்வாகிகள் எதிர்பார்க்கின்றனர்.