
சென்னையில் இன்று 22 காரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 240 ரூபாய் குறைந்து ஒரு லட்சத்து 9 ஆயிரத்து 440 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.
கிராம் அடிப்படையில் தங்கம் 30 ரூபாய் குறைந்து 13,680 ரூபாயாக உள்ளது.
சர்வதேச நிலவரங்களின் அடிப்படையில் தமிழகத்தில் தங்கம் விலை தொடர்ந்து ஏற்ற இறக்கங்களைச் சந்தித்து வருகிறது.