
எரிபொருள் வினியோக நிலைமை மேம்பட்டுள்ளதால், நகர்ப்புறம் மற்றும் கிராமப்புறம் என வேறுபாடின்றி எல்பிஜி சிலிண்டர் முன்பதிவு இடைவெளி 25 நாட்களாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
கடந்த பிப்ரவரி மாதம் மத்திய கிழக்கில் ஏற்பட்ட மோதலால் கிராமப்புறங்களில் 45 நாட்களாக இருந்த முன்பதிவு காலக்கெடு, தற்போது மீண்டும் 25 நாட்களாக குறைக்கப்பட்டுள்ளது.
இந்த புதிய நடைமுறையை உடனடியாக அமல்படுத்துமாறு பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயுத்துறை இணை மந்திரி சுரேஷ் கோபி உத்தரவிட்டுள்ளார்.