
அமெரிக்க அதிபர் டிரம்ப் ஒரு பெரும் பொய்யர் என்றும், அவர் அமெரிக்கர்களை ஏமாற்றி வருவதாகவும் ஈரானின் புரட்சிகர காவல்படை கடுமையாக விமர்சித்துள்ளது.
ஈரானின் அணுசக்தி திட்டம் மற்றும் வளைகுடாவில் இருந்து எரிசக்தி ஏற்றுமதி கட்டுப்பாடுகளை டிரம்ப் தவறாக சித்தரிப்பதாக அதன் பேச்சாளர் ஹூசைன் மொஹப்பி குற்றம்சாட்டியுள்ளார்.
ஈரான் எந்தவிதமான அணு ஆயுதங்களையும் தேடவில்லை என்றும் அவர்கள் தெளிவுபடுத்தியுள்ளனர்.