
சபரிமலை மற்றும் மாளிகப்புரம் கோவில்களுக்கான புதிய மேல்சாந்திகளைத் தேர்வு செய்வதற்கான குலுக்கல் நாளை காலை சன்னிதானத்தில் உஷ பூஜைக்கு பின் நடைபெறுகிறது.
நடப்பு மண்டல மகரவிளக்கு சீசன் முதல் ஒரு வருட காலத்திற்குப் பணியாற்றுவதற்காக நடைபெற்ற நேர்முகத் தேர்வில் சபரிமலைக்கு 5 பேரும், மாளிகப்புரத்திற்கு 3 பேரும் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
பந்தளம் மன்னர் குடும்பத்தைச் சேர்ந்த சிறுவன் அர்ஜூன் மற்றும் சிறுமி அனஸ்வரா ஆகியோர் குலுக்கல் முறையில் மேல்சாந்திகளைத் தேர்வு செய்வார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.