
பாலியல் வழக்கில் ஆயுள் தண்டனை பெற்று பெங்களூரு சிறையில் அடைக்கப்பட்டுள்ள முன்னாள் எம்.பி. பிரஜ்வல் ரேவண்ணா, சிறைக்குள் செல்போன் பயன்படுத்தியது கண்டறியப்பட்டுள்ளது.
சிறை அதிகாரிகள் நடத்திய திடீர் சோதனையில் செல்போன் பறிமுதல் செய்யப்பட்டதையடுத்து, இது குறித்து குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
சிறை விதிகளுக்கு மாறாக கைதிகளுக்கு வி.ஐ.பி. சலுகைகள் வழங்கப்படுவதாக எழுந்த சர்ச்சையைத் தொடர்ந்து, இந்தச் சம்பவம் மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.