/nakkheeran/media/media_files/2026/09/18/denguefever-2026-09-18-11-42-34.jpg)
தமிழ்நாட்டில் பருவமழை காலம் தொடங்கியுள்ள நிலையில், டெங்கு காய்ச்சல் பரவல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள தகவலின்படி, நேற்று முன்தினம் தமிழ்நாடு முழுவதும் ஒரே நாளில் 1,320 பேர் காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளனர், அதில் 244 பேருக்கு டெங்கு காய்ச்சல் உறுதி செய்யப்பட்டுள்ளது.
தலைநகர் சென்னையில் மட்டும் ஒரே நாளில் 87 பேர் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், நடப்பாண்டில் செப்டம்பர் 15ஆம் தேதி வரை 16,577 பேர் பாதிக்கப்பட்டு 9 பேர் உயிரிழந்துள்ளனர்.