
திருச்சி கிழக்கு உள்ளிட்ட 4 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடத்த உத்தரவிட வேண்டும் என்ற முதல்வர் விஜய் தரப்பு கோரிக்கையை நிராகரிக்க வேண்டும் என தேர்தல் ஆணையம் சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.
தேர்தல் வழக்கு நிலுவையில் உள்ள தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் அறிவிக்க தடை விதிக்கக் கோரி தாக்கல் செய்யப்பட்ட பொதுநல வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம் ஏற்கனவே தடை விதித்துள்ளது.
மக்கள் பிரதிநிதித்துவச் சட்டப்படி, தேர்தல் வழக்குகள் ஆறு மாதங்களுக்குள் முடிக்கப்பட்டு, அதே காலக்கட்டத்துக்குள் இடைத்தேர்தல் நடத்தப்பட வேண்டும் என தேர்தல் ஆணையம் குறிப்பிட்டுள்ளது.