
மத்திய தமிழகம் மற்றும் அதை ஒட்டிய பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல சுழற்சி மற்றும் காற்றழுத்த தாழ்வு பாதை காரணமாக, தமிழகத்தில் நாளை முதல் செப்டம்பர் 27-ம் தேதி வரை மிதமான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
நாளை மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள் மற்றும் தென் தமிழகத்தில் ஓரிரு இடங்களில் இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய மிதமான மழையும், சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் ஓரளவு மேகமூட்டத்துடன் கூடிய லேசான அல்லது மிதமான மழையும் பெய்ய வாய்ப்புள்ளது.
தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் பதிவான மழை அளவுகளின்படி அதிகபட்சமாக கோவை மாவட்டம் பெரியநாயக்கன்பாளையத்தில் 21 செ.மீ, சிவகங்கை மாவட்டம் மானாமதுரையில் 18 செ.மீ மழை பதிவாகியுள்ளது.