
மாணவர்களின் நலன் கருதி பள்ளிகளில் உடற்கல்வி பாடவேளைகள் அதிகரிக்கப்பட்டு புதிய அட்டவணை அமலுக்கு வந்துள்ளது.
6 முதல் 12-ம் வகுப்புக்கு வாரத்தில் மூன்றும், 1 முதல் 5-ம் வகுப்புக்கு ஐந்து நாட்களும் பாடவேளைகள் அதிகரிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
ஆனால் மாநிலத்தில் 6 ஆயிரம் உடற்கல்வி ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளதால் புதிய அட்டவணையால் பயனில்லை எனத் தலைமையாசிரியர்களும் சங்கங்களும் கவலை தெரிவித்துள்ளனர்.