
பிஎஸ்என்எல் நிறுவனம் ஆகஸ்ட் 12 முதல் செப்டம்பர் 12 வரை 'ஃப்ரீடம் 2.0' திட்டத்தின் கீழ் ரூ.1 கட்டணத்தில் புதிய சிம்கார்டுகளை வழங்குகிறது.
4ஜி சேவைக்காக 1,014 கோபுரங்கள் செயல்பாட்டில் உள்ள நிலையில், பழைய வாடிக்கையாளர்கள் இலவசமாக 4ஜி சிம்கார்டுக்கு மேம்படுத்திக்கொள்ளலாம் என முதன்மை பொது மேலாளர் லோகநாதன் தெரிவித்துள்ளார்.
ரூ.122 முதல் தொடங்கும் கட்டணத்தில் 400 சேனல்கள் கொண்ட ஐபிடிவி சேவை மற்றும் ரூ.1,111 எப்டிடிஎச் திட்டம் உள்ளிட்ட சிறப்புச் சலுகைகளும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.