
சிவகாசி அருகே செங்கமலப்பட்டியில் ராம்பிரகாஷ் என்பவர் சட்டவிரோதமாக நடத்தி வந்த பட்டாசு ஆலை திடீரென வெடித்துச் சிதறியதில் 5 பேர் உயிரிழந்தனர்.
சம்பவ இடத்திலேயே ராம்பிரகாஷ், இன்னாசிமுத்து, அய்யப்பராஜா, பாண்டித்துரை ஆகிய 4 பேர் உடல் சிதறி உயிரிழந்த நிலையில், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ராமச்சந்திரன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
90 சதவீத தீக்காயங்களுடன் விருதுநகர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ராமச்சந்திரன் உயிரிழந்ததை அடுத்து, இந்த விபத்தில் பலியானவர்களின் எண்ணிக்கை 5ஆக உயர்ந்துள்ளது.