
தெற்கு சூடான், மால்டோவா, ஸ்வீடன், ஜெர்மனி, ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் நைஜீரியா ஆகிய 6 நாடுகளின் புதிய தூதர்கள் ஜனாதிபதி திரவுபதி முர்முவிடம் நற்சான்றிதழ்களை வழங்கினர்.
குடியரசுத் தலைவர் மாளிகையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில், தூதர்கள் ஜனாதிபதியுடன் இருதரப்பு ஒத்துழைப்பு மற்றும் எதிர்கால உறவுகள் குறித்து கலந்துரையாடினர்.
இந்த சந்திப்பின் மூலம் இந்தியாவுக்கும் அந்த நாடுகளுக்கும் இடையிலான நட்புறவை வலுப்படுத்துவது குறித்து ஆலோசிக்கப்பட்டது.