
தென்காசி மாவட்டம் நெல்கட்டும்செவலில் பூலித்தேவன் பிறந்தநாள் விழாவில் பங்கேற்ற அமைச்சர் நிர்மல் குமார் மற்றும் காங்கிரஸ் தலைவர் மாணிக்கம் தாகூர் பிரதமர் வேட்பாளர் குறித்து கருத்து தெரிவித்துள்ளனர்.
விஜய் பிரதமராக வேண்டும் என்பதில் எந்த சர்ச்சையும் இல்லை என அமைச்சர் நிர்மல் குமார் கூற, ராகுல் காந்திதான் பிரதமர் வேட்பாளர் என்பதில் சந்தேகமில்லை என மாணிக்கம் தாகூர் திட்டவட்டமாக தெரிவித்தார்.
தமிழக முதல்வராக விஜய் தொடர வேண்டும் என்றும், ஊழலற்ற ஆட்சியை வழங்க காங்கிரஸ் துணை நிற்கும் என்றும் மாணிக்கம் தாகூர் தனது ஆதரவை வெளிப்படுத்தியுள்ளார்.