
வருவாயை அதிகரிக்கும் நோக்கில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் பங்கேற்கும் முத்தரப்பு அல்லது நான்கு நாடுகள் கிரிக்கெட் தொடரை நடத்த ஐசிசி ஆலோசித்து வருகிறது.
துபாயில் செப்டம்பர் 22 மற்றும் 23 ஆகிய தேதிகளில் நடைபெறவுள்ள ஐசிசி கருத்தரங்கில், 2027-2031 காலத்திற்கான சுற்றுப்பயண அட்டவணை குறித்து விவாதிக்கப்பட உள்ளது.
இரு நாடுகளுக்கும் இடையிலான அரசியல் பதற்றம் காரணமாக, நடுநிலையான நாடுகளில் மட்டுமே இந்தத் தொடரை நடத்த ஐசிசி திட்டமிட்டுள்ளது.