
ஈரான் மீது அமெரிக்க அதிபர் ட்ரம்ப் புதிய பொருளாதாரத் தடைகளை விதித்துள்ள நிலையில், இதை சட்டவிரோத பொருளாதாரப் போர் என ஈரான் கடுமையாக விமர்சித்துள்ளது.
ஈரானுடன் வர்த்தகம் செய்யும் நாடுகள் மீது அமெரிக்கா பொருளாதார நடவடிக்கைகளை எடுக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளதால், சர்வதேச வர்த்தகத்தில் பெரும் சிக்கல் எழுந்துள்ளது.
இந்தத் தடைகள் ஐ.நா சாசனத்தின் இறையாண்மை சமத்துவக் கோட்பாட்டை மீறுவதாகவும், காலனித்துவ ஆட்சிக்கு வழிவகுப்பதாகவும் ஈரானின் வெளியுறவுத் துறை செய்தித் தொடர்பாளர் எஸ்மாயில் பாகாயி தெரிவித்துள்ளார்.