
செயற்கை நுண்ணறிவுத் துறையில் கடுமையான கட்டுப்பாடுகள் இல்லையென்றால் அடுத்த சில ஆண்டுகளில் 100 கோடி மக்களை ஏஐ தொழில்நுட்பம் அழித்துவிடும் என மைக்ரோசாப்ட் இணை நிறுவனர் பில் கேட்ஸ் எச்சரித்துள்ளார்.
தவறானவர்கள் கையில் சிக்கினால் ஏஐ மிகவும் சக்திவாய்ந்த ஆபத்தான ஆயுதமாக மாறும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
எனவே நிறுவனங்களின் சுய கட்டுப்பாடு மட்டும் போதாது எனவும், ஒவ்வொரு நாட்டு அரசும் இதில் தலையிட்டு கடுமையான விதிமுறைகளை உருவாக்க வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.