
செயற்கை நுண்ணறிவு (AI) மூலம் எழுதப்பட்டு வரும் மின்னஞ்சல்கள் மற்றும் ஆவணங்களை ஒருபோதும் படிக்க மாட்டேன் என 'கோ டாடி' சிஇஓ அமன் பூடானி தெரிவித்துள்ளார்.
சொந்தமாக எழுத நேர ஒதுக்காதவர்களுக்காகத் தனது நேரத்தை வீணடிக்க விரும்பவில்லை என்றும், ஏஐ மூலம் உருவானவை பக்கம்பக்கமாக வளவளவென இருக்கும் என்றும் அவர் விமர்சித்தார்.
ஆராய்ச்சிக்கு ஏஐ நுட்பத்தைப் பயன்படுத்தலாம், ஆனால் ஆவணங்களை உருவாக்க ஊழியர்கள் சொந்தச் சிந்தனையையே பயன்படுத்த வேண்டும் என அவர் உத்தரவிட்டுள்ளார்.