
நெதர்லாந்து மற்றும் பெல்ஜியத்தில் நடைபெறவுள்ள 2026 உலகக்கோப்பை ஹாக்கி தொடரில், இந்தியா தனது முதல் போட்டியில் ஆகஸ்ட் 15 அன்று வேல்ஸ் அணியை எதிர்கொள்கிறது.
டி பிரிவில் இடம்பெற்றுள்ள இந்திய அணி, ஆகஸ்ட் 17 அன்று இங்கிலாந்துடனும், ஆகஸ்ட் 19 அன்று பாகிஸ்தானுடனும் மோதவுள்ளது.
தலைமைப் பயிற்சியாளர் கிரெய்க் ஃபுல்டன் தலைமையிலான இந்திய அணி, 16 நாடுகள் பங்கேற்கும் இந்தத் தொடரில் பதக்கம் வெல்லும் முனைப்புடன் களமிறங்குகிறது.