
சென்னையில் உள்ள எஸ்டிஏடி மைதானத்தில் நவம்பர் 2 முதல் 8-ம் தேதி வரை சர்வதேச மகளிர் டென்னிஸ் போட்டி நடைபெற உள்ளது.
இந்த டபிள்யூடிஏ 250 புள்ளிகள் கொண்ட தொடரில், உலகத் தரவரிசையில் முதல் 50 இடங்களுக்குள் உள்ள வீராங்கனைகள் பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
போட்டி நடைபெறும் மூன்று ஆடுகளங்களிலும் முதன்முறையாக மின்னணு 'லைன் காலிங்' தொழில்நுட்பம் பயன்படுத்தப்படும் என்று தமிழ்நாடு டென்னிஸ் சங்கத் தலைவர் விஜய் அமிர்தராஜ் அறிவித்துள்ளார்.