சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள எஸ்டிஏடி மைதானத்தில் வரும் நவம்பர் 2 முதல் 8 வரை சென்னை ஓபன் மகளிர் டென்னிஸ் தொடர் நடைபெறவுள்ளது.
இத்தொடரின் பிரதான சுற்றில் நேரடியாகக் கலந்து கொண்டு விளையாடுவதற்காக இந்தியாவின் வைஷ்ணவி அத்கர், சஹஜா யாமலபள்ளி, மாயா ராஜேஷ்வரன் மற்றும் அமெரிக்காவின் கேத்ரின் ஹுய் ஆகிய 4 வீராங்கனைகளுக்கு வைல்டு கார்டு அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த அறிவிப்பின் மூலம் இந்த வீராங்கனைகள் நேரடியாக பிரதான சுற்றுப் போட்டிகளில் களமிறங்குவார்கள்.