ஹர்திக் பாண்டியாவை வேறு அணிக்கு மாற்றும் முயற்சியில் மும்பை இந்தியன்ஸ் நிர்வாகம் ஈடுபட்டுள்ள நிலையில், கேகேஆர் அணியுடன் நடத்திய பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது.
கேகேஆர் நிர்வாகம் ரிங்கு சிங் மற்றும் வருண் சக்ரவர்த்தியை மட்டுமே விடுவிக்க முன்வந்த நிலையில், மும்பை அணிக்கு இளம் பேட்டர்கள் தேவைப்படுவதால் அந்த ஒப்பந்தம் உடன்படவில்லை.
கேகேஆர் உடனான பேச்சுவார்த்தையை ரத்து செய்துவிட்டு, மீண்டும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியுடன் பேச்சுவார்த்தையைத் தொடங்க மும்பை இந்தியன்ஸ் நிர்வாகம் திட்டமிட்டுள்ளது.