
இந்திய சினிமாவில் பெண்களுக்கு வலுவான கதாபாத்திரங்கள் உருவாக, அதிகமான பெண் இயக்குநர்களும், பெண் திரைக்கதை ஆசிரியர்களும் வர வேண்டும் என நடிகை மாளவிகா மோகனன் வலியுறுத்தியுள்ளார்.
நடிகைகளால் மட்டுமே திரையில் பெண்களின் பிரதிநிதித்துவத்தை சிறப்பாக மாற்ற முடியாது என்றும், பெண் இயக்குநர்கள் தங்கள் அனுபவங்களைக் கதைகளில் கொண்டு வருவார்கள் என்றும் அவர் கூறினார்.
குவென்டின் டரான்டினோவின் ‘கில் பில்’ போன்ற சிறந்த ஆக்ஷன் திரைப்படங்களை இந்தியாவில் உருவாக்க அதிக பெண் இயக்குநர்கள் தேவை என்று மாளவிகா மோகனன் தெரிவித்தார்.