
எகிப்து தலைநகர் கெய்ரோவில் நடைபெறும் உலக கோப்பை துப்பாக்கி சுடுதல் தொடரில், ஆண்களுக்கான 10 மீ. ஏர் பிஸ்டல் பிரிவில் இந்தியாவின் உதய்வீர் சித்து தங்கப்பதக்கம் வென்று சாதனை படைத்துள்ளார்.
தகுதிச் சுற்றில் 585.19 புள்ளிகளுடன் 3-வது இடம் பிடித்து பைனலுக்கு முன்னேறிய உதய்வீர், இறுதிப் போட்டியில் 240.6 புள்ளிகளுடன் முதலிடத்தைப் பிடித்தார்.
இந்தத் தொடரில் இந்தியாவுக்கு முதல் பதக்கத்தைப் பெற்றுத்தந்த உதய்வீர், 10 மீ. ஏர் பிஸ்டல் மற்றும் சீனியர் உலக கோப்பை பிரிவுகளில் தனது முதல் சர்வதேச பதக்கத்தைக் கைப்பற்றியுள்ளார்.