
ஆஸ்திரேலியா ஏ மற்றும் இந்தியா ஏ அணிகள் பங்கேற்கும் நட்பு ரீதியிலான கிரிக்கெட் தொடர் புதுச்சேரியில் வரும் 22-ம் தேதி தொடங்குகிறது.
புதுச்சேரி துத்திப்பட்டில் உள்ள சிஏபி மைதானத்தில் நடைபெறும் இத்தொடரில் 2 டெஸ்ட் மற்றும் 3 ஒருநாள் போட்டிகள் நடைபெறுகின்றன.
இந்தத் தொடர் அக்டோபர் 11-ம் தேதி வரை நடை பெறவுள்ளது குறிப்பிடத்தக்கது.