
தமிழகம் முழுவதும் சீரான மற்றும் தடையற்ற மின் வினியோகத்தை உறுதி செய்ய கூடுதலாக 2,000 மெகாவாட் மின்சாரம் கொள்முதல் உள்ளிட்ட பல்வேறு உடனடி நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
மின் வாரிய தலைமையகத்தில் உள்ள உயர்மட்ட அலுவலர்கள் குழு 24 மணி நேரமும் மின் தொகுப்பு மற்றும் மின் வினியோக நிலைமையை தொடர்ந்து கண்காணித்து வருகிறது.
மின்துறை சார்ந்த புகார்களுக்கு 24 மணி நேரமும் செயல்படும் 'மின்னகம்' நுகர்வோர் சேவை மையத்தை 94987 94987 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.