
ஸ்ரீவில்லிபுத்தூர் - மேகமலை புலிகள் காப்பக ஆக்கிரமிப்புகளை அகற்ற உச்சநீதிமன்றம் உத்தரவிட்டதையடுத்து, தேனி மாவட்ட ஆட்சியர் வைத்தியநாதன் அதிரடி நடவடிக்கைகளைத் தொடங்கியுள்ளார்.
ஆக்கிரமிப்பாளர்கள் பட்டியலில் உள்ள ராணுவம், காவல்துறை, வருவாய்த்துறை உள்ளிட்ட துறைகளைச் சேர்ந்த 118 அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வுபெற்ற அதிகாரிகள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
வருசநாடு பகுதியில் உள்ள 9 ஊராட்சி பகுதிகளில் வசிக்கும் 98 கிராம மக்கள் வெளியேற்றப்படலாம் என்ற அச்சத்தில் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் நிலையில், இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.