
தனது உடல்நலம் குறித்து சமூக வலைதளங்களில் பரவிய வதந்திகளுக்கு, செஃப் தாமு வீடியோ மூலம் விளக்கம் அளித்து முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.
தன்னை பிடிக்காதவர்கள் திட்டமிட்டு பரப்பிய பொய்ச் செய்தி இது என்று கூறிய அவர், தான் நலமாக இருப்பதாகத் தெரிவித்துள்ளார்.
வதந்திகளை நம்ப வேண்டாம் என்று ரசிகர்களிடம் கேட்டுக்கொண்ட அவர், தொடர்ந்து தனது சமையல் நிகழ்ச்சிகளில் கவனம் செலுத்துவதாகக் குறிப்பிட்டுள்ளார்.