
ஐரோப்பிய நாடுகளில் உள்ள சூப்பர் மார்க்கெட்டுகளின் குளிர்சாதனப் பெட்டிகள் மீது நடத்தப்பட்ட சைபர் தாக்குதலால் குளிரூட்டும் அமைப்புகள் செயலிழந்து பல கோடி ரூபாய் மதிப்பிலான உணவுப் பொருட்கள் சேதமடைந்தன.
பெல்ஜியம், லக்சம்பர்க், ஸ்வீடன் மற்றும் எஸ்டோனியா ஆகிய நாடுகளில் உள்ள சூப்பர் மார்க்கெட்டுகள் இந்தத் தாக்குதலால் பாதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தத் தாக்குதலுக்கு இதுவரை எந்த அமைப்பும் பொறுப்பேற்காத நிலையில், இதுதொடர்பான பின்னணியை உறுதிப்படுத்த முடியவில்லை எனப் பாதுகாப்பு நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.