
ராஜா கருப்பசாமி இயக்கத்தில் ரிஷிகாந்த், அனிஷ்மா அனில்குமார் நடிப்பில் இன்று திரையரங்குகளில் வெளியாகியுள்ள ‘மொத ராத்திரி’ திரைப்படத்தை நடிகர் சூரி பாராட்டியுள்ளார்.
மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில் உருவாகியுள்ள இப்படம், கிராமத்து பின்னணியில் குடும்ப உறவுகளையும் காதலையும் எதார்த்தமாகப் பதிவு செய்துள்ளதாக சூரி தனது எக்ஸ் தளத்தில் குறிப்பிட்டுள்ளார்.
பரத் சங்கர் இசையமைத்துள்ள இப்படம், தலைப்புக்கு ஏற்றவாறு கலகலப்பான திரைக்கதையுடன் வெற்றிபெறும் என படக்குழுவினர் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.