
தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் ஸ்லிப் திசையில் நின்ற ஆஸ்திரேலிய அணியின் மூத்த வீரர் ஸ்டீவ் ஸ்மித் அடுத்தடுத்து 3 கேட்ச்களைப் பிடித்தார்.
இதன் மூலம் டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் விக்கெட் கீப்பர் அல்லாத ஒரு ஃபீல்டராக அதிக கேட்ச்களைப் பிடித்த வீரர் (221 கேட்ச்கள்) என்ற உலக சாதனையை அவர் படைத்துள்ளார்.
இங்கிலாந்தின் ஜோ ரூட்டின் முந்தைய சாதனையை முந்தியுள்ள அவர், ராகுல் டிராவிட் மற்றும் ஜாக் காலிஸ் போன்ற ஜாம்பவான்களின் சாதனைகளையும் கடந்துள்ளார்.