
கரீபியன் பிரீமியர் லீக் டி20 தொடரின் 8-வது லீக் ஆட்டத்தில் ட்ரின்பகோ நைட் ரைடர்ஸ் அணியை 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் ஜமைக்கா கிங்ஸ்மென் வீழ்த்தியது.
முதலில் பேட் செய்த ட்ரின்பகோ அணி 20 ஓவர்களில் 182 ரன்கள் எடுத்த நிலையில், ஜமைக்கா அணி 18.4 ஓவர்களில் 183 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.
ஜமைக்கா அணியின் தொடக்க வீரர் மெக்கன்சி 25 பந்துகளில் 69 ரன்கள் குவித்து அணியின் வெற்றிக்கு முக்கிய காரணமாக அமைந்தார்.