
அமெரிக்காவின் சின்சினாட்டி நகரில் நடைபெற்று வரும் சின்சினாட்டி ஓபன் டென்னிஸ் தொடரின் முதல் சுற்றுப் போட்டியில் கிரீஸ் வீரர் ஸ்டெபனோஸ் சிட்சிபாஸ் வெற்றி பெற்றுள்ளார்.
ஆண்கள் ஒற்றையர் பிரிவில் நடைபெற்ற இந்த ஆட்டத்தில், சிட்சிபாஸ் பிரான்ஸ் வீரர் வேலண்டின் ரோயரை 7-6 (7-4), 7-5 என்ற நேர் செட் கணக்கில் வீழ்த்தினார்.
இந்த வெற்றியின் மூலம் சிட்சிபாஸ் தொடரின் அடுத்த சுற்றுக்கு முன்னேறியுள்ளார்.